Wednesday, May 16, 2012

அவர் வழியாக... அவரோடு... அவரில்...



அவர்
அவர்களை அன்பு செய்ததால்
அவர்கள்
அவர்களையே அன்பு செய்யக் கற்றுக் கொண்டார்கள்.

அவர்கள்
தங்களை அன்பு செய்வதன் வழியாக
பிறரையும் அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறார்கள்.


அவர்
அவர்களை மதித்ததால்
அவர்கள்
தங்களையே மதிக்கக் கற்றுக் கொண்டார்கள்.

அவர்கள்
தங்களை மதிப்பதன் வழியாக
பிறரையும் மதிக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.


அவர்
அவர்களை மன்னித்ததால்
அவர்கள்
தங்களையே மன்னிக்கக் கற்றுக் கொண்டார்கள்.

அவர்கள்
தங்களை மன்னிப்பதன் வழியாக
பிறரையும் மன்னிக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.


அவர்
தம்மையே நமக்குக் கொடுப்பதன் வழியாக
நம்மை தமதாக்கிக் கொண்டார்.

நாமும்
நம்மையே பிறருக்குக் கொடுப்பதன் வழியாக
பிறரை நமதாக்கிக் கொள்வோம்.


(திருச்சி துய பவுல் இறையியல் கல்லுரியில்
இறையியல் பயின்ற போது பயின்றது, மனதில் பதிந்தது)

- ராஜ் பென்னி

No comments:

Post a Comment